நிஜமதுவே..நிழலதுவே ..
யாரென்று தெரியாமல் என்னோடு பேசுகிறாய்
யாரென்று கேட்டால் சொல்லாமல் நழுவுகிறாய்
நீயென்ன தங்கத்தின் வார்ப்பா
தமிழ் கவிதை கோப்பா ... சொல்...சொல்...
அன்பே சிவமென்று அழகாய் சொல்கிறாய்
வம்பே சவமென்று கவிதீட்டி தள்ளுகிறாய்
காலத்தை கணிக்க முடியுமா
..காதலுக்கு வயதொரு தடையாகுமா... சொல்...சொல்..
வார்த்தைகளை கொண்டு வாக்கியம் அமைக்கிறாய்
பூக்களை கொண்டு பூமாலை தொடுக்கிறாய்
வார்தை எங்கிருந்து பொறுக்கினாய்
பூவை எங்கிருந்து நறுக்கினாய் ....
சொல்...சொல்..
குரலோசை கேட்டபின் குயிலோசை மறந்தேன்
வளையோசை கேட்டபின் மறுபடியும் பிறந்தேன்
குரலினிமை தந்தகுயில் பேரெதுவொ
கொடிமுல்லை தோட்டக்காரி நீயோ....
..சொல்..சொல்..