மழை என்னும் வரம் பெற

இயற்கையின் வரபிரசாதம்
தான் மழை என்னும் அமிர்தம் ...

மழை நீரை சேமிக்க மட்டும்
அனைவரும் மறந்துவிடுகிறோம் ...

பல ஆண்டுகளின் தவமாய்
வளரும் மரங்களை
பணத்திற்காக வெட்டி
கூறு போடுகிறோம் ....

விளை நிலத்தை
விலை நிலமாக மாற்றி
கட்டிடங்களை எழுப்பி
பணத்தை சேமிக்கிறோம் பெருமளவில் ...

சிறுக சிறுக மழைநீரை சேகரித்து
குடிநீராக மாற்ற மட்டும் யோசிக்கிறோம் ...

எவ்வளவு பணத்தை
எங்கு சேமித்து வைத்தாலும்
"தாயாக மதித்து
போற்ற வேண்டிய மழை
நீரை " நாம் சேமிக்க நினைப்பதில்லை ...

தாகத்தை தனிக்கும் குடிநீரை
கூட பணத்தை கொண்டே
வாங்கி பருகுகிறோம் ....

முயற்சி செய்வோம் என்றே
சொல்கிறோம் -ஆனால்
மழை நீரை சேமிக்க
மட்டும் மறந்து விடுகிறோம் ...

பணத்தை சேமிக்க நினைக்கும்
அளவுக்கு நாம் உயிர் வாழ காரணமான
குடிநீராகிய மழைநீரை சேமிக்கவும் ,
மரங்களை வளர்க்கவும் தவறிவிடுகிறோம் ....
நம் வீடுகளில் கூட...

மழை இல்லையென
கூட்டு பிராத்தனைகளை
மேற்கொள்ளும் நாம்
நிலத்தை பசுமையாக்கி
மழை பெற மறந்து விட்டோம் ...

நாம் நம்மால் முடிந்த வரை
மரங்களை வளர்த்து மழை பெற
முயற்சி செய்து மழை பெறுவோம்....

வறுமையில் இருந்து அகல
நிலத்தை குளிர வைக்க
முயற்சி செய்வோம் அனைவரும் ...

எழுதியவர் : சகி (24-Aug-13, 4:25 pm)
பார்வை : 109

மேலே