செந்தூர் வேலவா
செந்தூர் வேலவா
சித்தம் தெளிந்தேன்
செந்தமிழ் கொண்டு
சிற்றடி பொழிந்தேன்
பற்றற்று வந்தேன் -உன்தாள்
பற்றிட வந்தேன்
(செந்தூர் வேலவா.......)
ஆத்திகன் போற்றி
நாத்திகன் போற்றி
நாளும் போற்றி
கோளும் போற்றி
ஆலும் போற்றி
வேலும் போற்றி
வேம்பும் போற்றி
காம்பும் போற்றி
கண்ணீரும் போற்றி
தண்ணீரும் போற்றி
தாமரையும் போற்றி
கோமதியும் போற்றி
(செந்தூர் வேலவா.......)
காற்றும் நீயே
நாற்றும் நீயே
நன்மையும் நீயே
இன்மையும் நீயே
பாட்டும் நீயே
வேட்டும் நீயே
வேசமும் நீயே
பாசமும் நீயே
சந்தனமும் நீயே
செந்தணலும் நீயே
சரித்திரமும் நீயே
சத்திரமும் நீயே
(செந்தூர் வேலவா.......)
புத்திரனும் போற்றி
புத்திமதியும்போற்றி
சித்திரமும்போற்றி
சிற்றுளியும்போற்றி
அழகியும்போற்றி
அழகனும்போற்றி
மூளியும்போற்றி
காளியும் போற்றி
வேலனும் போற்றி
காலனும் போற்றி
கட்டையும் போற்றி
நெட்டையும் போற்றி
(செந்தூர் வேலவா.......)
நீட்சியும் நீயே
மீட்சியும் நீயே
மானமும் நீயே
தானமும் நீயே
தங்கமும் நீயே
அங்கமும் நீயே
ஆக்கமும் நீயே
தேக்கமும் நீயே
அறமும் நீயே
புறமும் நீயே
பொழுதும் நீயே
விழுதும் நீயே
(செந்தூர் வேலவா.......)
வீரமும்போற்றி
ஈரமும் போற்றி
ஈகையும்போற்றி
கூகையும்போற்றி
கோபமும்போற்றி
தாபமும்போற்றி
கார்த்தியும் போற்றி
மூர்த்தியும்போற்றி
உலகமும்போற்றி
கலகமும்போற்றி
கடலும்போற்றி
திடலும்போற்றி
(செந்தூர் வேலவா.......)
கந்தனும் நீயே
கடம்பனும் நீயே
காண்பொருளும் நீயே
காணாததும் நீயே
உடும்பாயுன்னை பற்றினேனே
உமையாள் மைந்தா போற்றி
ஒருவழிகாட்டு உலகநாதா
உந்தவமடி போற்றி போற்றி !!!