பச்சை நிறத்தழகி....!!

பச்சை நிறத்தழகி
பழுத்த பின்னே
சிவப்பழகி ....!

காம்பு கிள்ளி கடிக்கையிலே
காட்டமாய் காட்டிடுவாள் !
கண்களை குளமாக்கிடுவாள் ....!!

குட்டையாய் தடித்திருப்பாள்
மெலிந்தும் நீண்டிருப்பாள் ....!!

காரமகள் இவளில்லா....
சட்னியும் ருசிக்காது ..!
சமையலும் சிறக்காது ...!!

பசியைத் தூண்டிடுவாள்
அதிகம் சேர்த்திடிலோ...
அல்சர் வரவழைப்பாள் ....!!

வீட்டுத் தொட்டியிலே
விதைபோட வளர்ந்திடுவாள் ...
விருந்துக்கு உதவிடுவாள் ...!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Aug-13, 10:49 pm)
பார்வை : 77

மேலே