யார் அங்கே?

அமெரிக்கன், ஆங்கிலேயன், ஐரிஷ்காரன் ஆகிய மூவரும் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்தக் கார் பழுதாகி நின்று விட்டது.
சிறிது தூரம் நடந்த அவர்கள் ஒரு வீட்டைக் கண்டார்கள். அந்த வீட்டுக் கதவைத் தட்டிய அவர்கள் தங்கள் நிலையைச் சொல்லி "இன்றிரவு எங்களை இங்கே தங்க அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.
"இங்கே வயதுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள். உங்களைத் தங்க அனுமதிக்க முடியாது. வீட்டிற்கு வெளியே மாட்டுக் கொட்டகை ஒன்று உள்ளது. இன்றிரவு அங்கே தங்கிவிட்டுச் செல்லுங்கள். யாராவது இங்கே வர முயற்சி செய்தால் இந்தத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேன்" என்று மிரட்டினான் வீட்டுக்காரன்.
மூவரும் மாட்டுக் கொட்டகையில் படுத்தார்கள்.
அமெரிக்கனுக்குத் தூக்கம் வரவில்லை. எழுந்த அவன் மெல்ல நடந்து அந்த வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தான்.
காலடி ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, "யார் அங்கே" என்று குரல் கொடுத்தான்.
தப்பிக்க நினைத்த அமெரிக்கன் "மியாவ்" என்று பூனையைப் போலக் கத்தினான்.
வந்தது பூனை என்று நினைத்த வீட்டுக்காரன் சும்மா இருந்தான்.
உயிர் பிழைத்த அமெரிக்கன் மாட்டுக் கொட்டகைக்குத் திரும்பினான். நடந்ததை நண்பர்களிடம் சொன்னான்.
அடுத்தது ஆங்கிலேயன், மெல்ல நடந்து அந்த வீட்டிற்குள் நுழைந்தான். ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, "யார் அங்கே" என்று கேட்டான்.
"மியாவ்" என்று குரல் கொடுத்தபடி அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தான் ஆங்கிலேயன்.
நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் ஐரிஷ்காரன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.
ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, "யார் அங்கே" என்று கோபத்துடன் குரல் கொடுத்தான்.
"நான் தான் பூனை" என்று பதில் சொன்னான் ஐரிஷ்காரன்.

எழுதியவர் : சரண் mkuniversity (25-Aug-13, 3:07 pm)
பார்வை : 156

மேலே