நலமுடன் வாழப் பழகுவது எப்படி ?

முடியல என்ற எண்ணம் வந்தால்
விடியல பார்த்துப் பழகுங்கள்...!
கொடியில மலர் பூப்பதாய் இன்பம்
நொடியில மலரக் காணுங்கள்...!
கவலயே இன்றி பறவைகள் வானில்
கவிதயே படிக்கக் கேளுங்கள்...!
காத்துலே குயில் ஓசைகள் வந்து
கதைகளே கூறக் கேளுங்கள்...!
நேற்றிலும் இன்று இன்பமே என்று
நெஞ்சிலே எண்ணிக் கொள்ளுங்கள்..!
நாளையும் விடியல் நமக்கே என்று
நலமுடன் வாழப் பழகுங்கள்.....!