+வருத்தத்துடன் வருங்காலம்!+

பெருமூச்சுடன்
பெருங்கவலையுடன்
பெருஞ்சிந்தனையுடன்
பொறுமையிழந்து
நடைபயின்று கொண்டு இருந்தது
வருங்காலம்!

மனசுக்குள்
மனிதனை
கன்னா பின்னாவென்று
திட்டிக்கொண்டு இருந்தது!

எப்படி இருந்த உலகம்
இப்படி ஆக்கி விட்டானே!

பசுமையான உலகை
அழகிழ‌க்க வைத்துவிட்டான்!
சுத்தமான காற்றில்
அசுத்தத்தை கலந்துவிட்டான்!
இருந்த வளத்தையெல்லாம்
பணமாக மாற்றிவிட்டான்!

அவனால் முடிந்தவரை
அவன் அவனைப்பற்றி
அவன் காலத்தைப்பற்றி
மட்டுமே சிந்திக்கிறான்!

என் காலத்தில் வரும் சந்ததிக்கு
கொடுக்க என்ன உண்டு என்னிடத்தில்

கண்ணீருடன்
கலங்கியபடியே வருங்காலம்!
கண்துடைக்க யாருண்டு?
மானிடனே சொல்லிவிடு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Aug-13, 9:14 am)
பார்வை : 65

மேலே