11. குறும்பா (பெண்)- அஹமது அலி

கந்தல் ஆடையிலும்
உயி(ய)ர் மானம் காக்க
நாணி மேனி மறைப்பாள் ஏழை!


புத்தாடையும் பட்டாடையும்
எண்ணிக்கையில் நிறைப்பாள்
பெரும் பகட்டில் பணக்காரி!


ஆடை குறைப்பதில்
அழகை கூட்டுவதாய்
பேதமையில் நாகரீகப் பெண்!


அவன் அருகிருந்தும் அந்தோ பரிதாபம்
தொலைவாகிப் போன வாழ்வில்
வதங்குவாள் தாய் வீட்டில்!


வெண்ணுடை அணிந்து
வெந்நீரில் மெழுகாய் குளிப்பாள்
கணவனை இழந்தவள்!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (26-Aug-13, 7:27 am)
பார்வை : 149

மேலே