முழு பைத்தியக்காரி என்று !!!
உன்னை சரியாய் புரிந்திட
என்னை விட யாரும் இல்லை
என்று அறிந்திடும் வேளையில்
என்னுடன் நீ இல்லை
என்பது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை நீ எனக்குள்
இருக்கிறாய் என்பது
என்னை மறந்திட நினைத்து
என்னவன் பிரிந்தபோது தான்
என்னை உணர்ந்தேன்
முழு பைத்தியக்காரி என்று !!!