காத்திருப்பேன் என் கல்லறையில் உனக்காக

இதயம் என்னும் கூண்டுக்குள் மலர்களை போன்ற உன் அழகை சிறை அடைத்தது என் தவறா - இல்லை...
நீ சிறைக்குள் வந்தது உன் தவறா......
மழலை போன்ற உன் குரலை நான் ரசிக்க விரும்பியது என் தவறா - இல்லை....
நீ என்னிடம் மழலை போன்ற குரலில் பேசியது உன் தவறா......
சிரித்து கொண்டிருந்த என் நினைவுகளை சிறை அடைத்தது என் தவறா - இல்லை....
என் சிறைக்குள் (சிந்தைக்குள்) வலம் வந்தது உன் தவறா......
மறக்க முடியாத நினைவுகளை என் மனம் கண்டு தவிப்பது என் தவறா - இல்லை.....
அந்த நினைவுகளை நீ தந்து, நான் பெற்றது என் தவறா........
இதயம் என்னும் கூண்டுக்குள்
உன் நினைவை அடக்கி
காதல் என்னும் தீயை கொளுத்தி
வெற்றி எனும் சாம்பலோடு
உன் கல்லறை பக்கம்
என் சவ பெட்டியோடு காத்திருப்பேன்
நீ வரும் வரை ......
அங்காவது உன்னோடு வாழ.......