பாகம் 2

தனியார் பள்ளியில் இருந்து ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்ட சிவாவிற்கு அங்கு எல்லாமே புதிதாக இருந்தது எல்லோரும் ஆண்கள் ஒருசில ஆசிரியைகள் தவிர தான் ஏதோ தனித்து விடப்பட்டதை போல் உணர்ந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் போது அனைத்து பாடங்களிலும் முதலாவதாக வந்த மாணவன் இந்த பள்ளியில் பாஸ் மார்க் கூட தாண்டுவது பெருங்கஷ்டமாக இருந்தது . நாட்கள் சென்றன சிவாவின் மனத்தை ஒரு இனம் புரியாத உணர்ச்சி பாடாய் படுத்திகொண்டிருந்தது அவன் தன்னால் ஆண்களுடன் சகஜமாக ஏன் பழகமுடியவில்லை ஆண்களை கண்டாலோ பேசினாலோ ஒரு விதமான சிலிர்ப்பு ஏற்படுகிறதே தன்னுள் என் இந்த நிகழ்வுகள் என்ற கேள்வியை தன்னை தானே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டான் ஆனால் பதில் கிடைத்த பாடில்லை இதனால் அவனால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தான் .
மூன்று ஆண்டுகள் சென்றன சிவாவின் போக்கில் நிறைய மாற்றம் பள்ளியில் யாருடனும் பழகுவதில்லை வீட்டில் இருக்கும் சமயங்களில் துணி துவைப்பது பாத்திரங்கள் கழுவுவது மட்டும் அல்லாமல் வாசலில் கோலம் போடவும் ஆரம்பித்து விட்டான் மற்ற நேரங்களில் அக்கம் பக்கத்து வீட்டிற்கு சென்று அவர்களிடம் சமையல் செய்யும் முறைகளை கேட்டறிந்தான் அவர்கள் போட்டுள்ள ஆபரணங்கள்,புடவை இவைகளை பற்றியே அதிகம் பேசினான் இதனால் அவனை எல்லோரும் பெண் பெயர் வைத்து கூப்பிட ஆரம்பித்தனர் அது அவனுக்கு பிடித்திருந்தது அவன் தாயின் காதுபட சில பெண்கள் ஏன் இப்படி ஆண் பிள்ளையை பெண்கள் செய்யும் வேலைகளை செய்ய விடுகிறீர்கள் இது அவனுடைய வருங்கால வாழ்க்கையை கெடுத்து விடும் என்றனர். சிவாவின் தாயார் சிவாவை ஒரு போதும் திட்ட மாட்டார் ஆனால் செல்லமாக கடிந்து கொள்வார் ஆனால் சிவாவின் தந்தை அவனிடம் இனி அப்படி செய்யக்கூடாது ஆண்களிடம் பழக கற்றுக்கொள் என்று கடிந்து கொண்டார் ஆனால் சிவாவால் ஆண்களுடன் பழகுவதையோ அவர்கள் விளையாடும் விளையாட்டில் கலந்து கொள்ளவோ நாட்டம் செல்லவே இல்லை அவனுக்குள் பெரும் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது அது நான் யார் ஆணை போல் இருக்கும் என்னில் பெண் செய்கைகள் ஏன் இந்த விபரீத மாற்றம் என்ற கேள்வியை யாரிடம் சென்று கேட்பது தாயிடம் கேட்டால் எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்றாள் தந்தையிடம் இது பற்றி பேச கூச்சமாக இருந்தது . இப்போதெல்லாம் சிவாவை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் கூட பெண் பெயரில் தான் கூப்பிட்டனர் இது சிவாவிற்கு பெரிதும் அவமானமாக இருந்தது .
சிவாவிற்கு பள்ளிக்கூடம் செல்வதே பெரும் கஷ்டமாக இருந்தது எங்காவது ஓடி விடலாமா என்று கூட தோன்றியது ஆனால் தனியாக போக பயம் அதனால் எப்படியோ தாக்கு பிடித்து ஒன்பதாவது வகுப்பு வரை வந்து விட்டான். ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று சிவாவின் தந்தையார் தான் வேலை செய்யும் கடை ஓனர் வீட்டிற்க்கு வரச்சொன்னதாக கூறி சென்று பார்த்து வா என்றார். சிவாவிற்கு தந்தையின் ஓனரை அவர் வீட்டில் தனியே சென்று பார்க்க பயமாக இருந்தது இருந்தாலும் அப்பாவிடம் சொன்னால் திட்டுவாரே என்று சரி சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று ஓனரை பார்க்க சென்றான் ஒரு வித கலக்கத்துடன் ..........

மீண்டும் சந்திப்போம்................

எழுதியவர் : shivanitg (26-Aug-13, 5:55 pm)
சேர்த்தது : Shivani Tg
பார்வை : 37

மேலே