எதிர்பார்ப்புடன் திருநங்கைகள்............

திருநங்கைகள் நாங்கள் ..........
உங்களை போலே தான் பிறந்தோம்
நாங்களும்...........
உங்களை போலே தான்
வளர்ந்தோம் நாங்களும்............
பின் ஏன் இந்த வெறுப்பு எங்கள்
மீது மானிடரே........
பிட்சை எடுப்பது எங்கள் குற்றம்
என்றால்.........
குற்றவாளிகள் நாங்கள் அல்ல பிட்சை
எடுக்கும் நிலைக்கு எங்களை தள்ளிய
பெற்றோர்கள் தான்............
பாலியல் தொழில் செய்வது எங்கள் குற்றமென்றால்
அந்த தொழிலை ஓங்கி வளர செய்யும் ஆண்கள்
தான் குற்றவாளிகள் நாங்கள் அல்ல...........
வேலை கொடுக்க நீங்கள் தயாரா
சமுதாயமே..............
மாரை மறைத்து சேலை கட்ட
நாங்கள் தயார் .............
மண்ணையும் பொன்னாக்க முடியும்
எங்களால்................
குற்றமற்ற எங்களை குறை கூறி
ஒதிக்கி வைக்கும்
சமுதாயமே...............
மாறுவாயா நீ இல்லை
மடிய வேண்டுமா
நாங்கள்..........

எழுதியவர் : shivanitg (27-Aug-13, 11:33 am)
சேர்த்தது : Shivani Tg
பார்வை : 42

மேலே