ஒரு நாள்
ஒரு தாயின் மகிழ்ச்சி குழந்தை பெற்று எடுக்கும் போது...
என்கோ !!!!
என் மகள் ஒரு கனவு மாதிரி ... பெற்றுஎடுத்தேன் ...
அவள் அழும் விதம் , சிரிக்கும் விதம் ஏதும் அறியேன் ...
எது பிடிக்கும் பிடிக்காது.. அதுவும் தெரியாது...
பேசுவது என்ன என்று புரியாது ... தெரியாது ...
சொன்னால் !!! நீ புண்ணியம் செய்தவள் , எல்லோரும் இருகிறார்கள்...
ஆமாம் .... இல்லை என சொல்லவில்லை ....
எனக்கென்று ஒரு ஆசை...
எனக்கென்று ஒரு மகிழ்ச்சி ...
எனக்கென்று ஒரு நாள்...
இதற்காக நான் போராட வேண்டிஇருக்கிறது ...
குழந்தை பருவத்தை பார்க்க ஒரு நாள்...
'அம்மா' என்ற வார்த்தைக்கு ஒரு நாள் ...
என் மகள் உடன் ஒரு நாள் ...
எல்லாவற்றுக்கும் ஒரு நாள்...
அந்த ஒரு நாளுக்கு காத்திருக்கிறேன்...
என்று வருமோ அந்த ஒரு நாள் ....
அன்பு மகளுக்காக ...