தவளைகளைப் பிடிக்காத பாம்புகள்

காலப் பரப்பில்
வறட்சிக் காட்சிகளில்
தன்னை மறந்து லயிப்பது
தவளைகளுக்கு ஒன்றும் புதிதன்று

மழைக்காலங்களில்
வாயைக் கிளித்துக்கொள்வதால்
வலியேதும் இல்லை என்றும்

அதன் குரலெடுப்பால்தான்
மழைக்காலமும்
நினைவுக்கு வந்து விடுகிறது

நீர் மேடைகளும்
நீந்தலுக்கு சாதகமாகவே
அமைந்து விடுகிறது

தெளிந்த வானம் நோக்கி
தவ்விக்குதிப்பதாய்
காணும் கனவுகள்
அலைகளாய் பெருகுவது
தொடர்கிறது

தன் குரலால்
தன்னையே
முன்னிலைப்படுத்துவது
நீர்ச்சிதறலாய் தெறிக்கிறது

தவளைகள் கிண்டியும்
சீண்டியும்
இருள் மறைவதாயில்லை
விடியலை தன் நாக்கில்
சுழற்றிக்கொள்வதால்

நாதியற்றுத் தூங்குகிறது
மௌன வலைக்குள்
பாம்புகள்.,
அடுத்த ஆட்சி நமதென்று !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (27-Aug-13, 12:59 pm)
பார்வை : 104

மேலே