என் வீட்டு தோழிகள்!

வேப்ப மரத்து கிளையில்
அமர்ந்து ஊஞ்சலாடி
கீழே விழுந்து விட்டான்
என் மகன்!

ஓடிவந்து தூக்கி
மரத்தின் கிளையை அடிப்பதுபோல்
சைகை செய்து
அமர்த்திவிட்டேன் அழுகையை!

இப்போது
மரம் என்னிடம் முறை இட்டது!
அம்மா அவன் அழுகை நின்றுவிட்டது
என் கிளை ஒடிந்துவிட்டதே!
நான் என்ன செய்ய
என என்னிடம் கோபித்துக்கொண்டது!

வேப்பமரத்திடம் மன்னிப்பு கேட்டு திரும்பினால்
மல்லியும் முல்லையும்
சண்டையிட்டு கொண்டிருந்தன!
கனகாம்பரத்துடன் இன்று யார் ஜோடி சேர்வது என்று..!

திரும்பி சென்றால்
ரோஜா என்னை குத்தி இழுத்தது!
என்ன என திரும்பி பார்த்தேன்
நேற்று பாப்பா வைத்திருந்த‌
பக்கத்துவீட்டு ரோஜா எங்கே என்று கேட்டது!
அதை குப்பையில் போடாமல்
என் காலடியில் போட்டுவிடு
அம்மா நான் நாளை உதிர்ந்து
கீழே விழுந்து
நட்பாகி விடுகிறேன் என்றது!

இப்போது எல்லா செடிகளும்
என்னிடம் விண்ணப்பம் கொடுத்தது!
ஆறு மணிக்கு மேலே
யாரையும் எங்களை தொடவிடாதே அம்மா!
நாங்களும் உறங்குகிறோம் அம்மா!

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (27-Aug-13, 12:45 pm)
பார்வை : 62

மேலே