ஒரு அழகிய விருந்தாளி
ஒயிலாய் உனது இதய மாளிகையில்
ஒரு அழகிய விருந்தாளி வந்தமர்ந்து
உன்னோடு பேசவே காத்திருக்க - அவரை
ஓரம் கட்டுதல் முறையில்லை நண்பா...!
அன்பாக உன்னை பார்த்திடுவார்
அழகாக உன்னை காத்திடுவார்
அவரை அங்கே இங்கே தேடாதே உன்
அகத்துக்குள்ளே உன்னைப் பார்......
அளவின்றி அவரோடு பேசிப்பார்
அற்புத விசயங்கள் தெரிய வரும்.....
அதை விடுத்து வெளியே எதை தேடுகிறாய் ?
அங்கே இன்பங்கள் எல்லாம் மாயை.....!