முக - எனும் முத்தமிழ்

தெள்ளூத் தமிழெடுத்து தென்றலிலே மிதக்கவிட்டு
பள்ளூப் பலபாடிடும் தஞ்சைத் தமிழனே ! - உன்
சொல்லின் ஒலிக்கேட்டு சொக்காத மனமுண்டோ ?
எள்ளின் நுனியளவும் பிழையிருக்காது உன்தமிழில்

அல்லும் பகலும் அயராமல் உழைத்து
வெல்லும் அற்புதத்தை எங்கு கற்றாய் ?
கல்லும் கனியும் உன்முத்தான கவியில்
வெல்லம் அஃது எப்போதும் இனிக்கும் !

கடமை கண்ணியம் கட்டுப்பாடு – உன்
உடம்பில் கலந்த மூவகை மூலக்கூறு !
மடமை மாந்தரை தட்டி எழுப்ப – தினம்
மடல்கள் எழுதும் நீ புதுவகை புரநாநூறு !

கடவுள் நம்பிக்கை உனக்கு துளியுமில்லை, –
தமிழர்
கடவுளை மறந்தாலும் கருணாநிதியை மறப்பதில்லை
உடம்பே போனாலும் சிறிதும் கவலைப்படாமல் – நீதிக்காக
நடந்தே நெடும் பயணம்ச்சென்ற தென்னக சீமானே!

துகிலும் குழந்தையும் துள்ளியெழும் – உன்
மகிமை நிறைந்த மாணிக்க மொழிக்கேட்டு !
அகிலம் போற்றும் அற்புத தலைவனே !- ஏழை
குடிசைகள் கோபுரமானது உன் காலத்தில்தான் !

கடும்புயலே தாக்கினாலும் சாயாத ஆலமரமே !
சுடும்நெருப்பா உன்னை சுட்டுவிடப் போகின்றது ?
உடும்பைப் போன்று உள்ளவுறுதிக் கொண்டவனே !
பாடும்நான் பெரும்புலவனல்ல; உன் பரமபக்தன் !

எழுதியவர் : இரா.மணிமாறன், கைபேசி : (28-Aug-13, 8:07 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 70

மேலே