முக சாயல்

காலமெல்லாம்
காத்திருந்து...!
காதலிச்சவள
கைப்புடிச்சி....!

காசு பணம்
இல்லனாலும்....!
கலங்காம
காப்பாத்தி.....!

கருமேகம்
சூழும் நேரம்....!
களத்து மேட்டேரி
எனக்கு கஞ்சி
எடுத்து வந்தவ...!

கால் தடுக்கி
விழுந்தாலே...!
காது கேட்டு
நான் திரும்பி...!
கண்ணால
பாத்ததுமே...!

கலங்கிடுச்சி
என் கண்ணும்...!
அவ வைத்துள
இருக்குற
என் உசுரும்....!

கடைசில
பச்ச புள்ளைய
என் மார்புல வச்சி...!
உனக்கு பாடயதான்
காட்டியாச்சி...!

உம் போடவய கிளிச்சி...!
உம் மவுளுக்கு
போடயில....!

பளிச்சினு அவ
சிரிக்கையில...!
தெரியுதடி
உம் உசுரும்
என் உசுரும்...!!!

*****கே.கே..விஸ்வநாதன்****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (28-Aug-13, 9:15 am)
சேர்த்தது : K.K. VISWANATHAN
பார்வை : 78

மேலே