என் கண்ணனோடு நான்....

கற்பனையில் கோகுலத்தில்
நானும் வளர்க்கும் தோட்டம்
தோட்டத்திலே வாசமிகு
துளசி மணம் வீசும்...

வீசும் மணம் கண்ணன் தொட்டு
அழைத்து வந்து சேர்க்கும்
தோட்டத்திலே அவன் வரவால்
கோடி நிலவு கூடி பேசும்

கண்ணன் வந்த பரவசத்தில்
என் கண்கள் தானே மயங்கும்
அவனைக் கண்ட கணத்தினிலே
சொர்க்க வாசல் திறக்கும்

கண்ணன் நீல நிற மேனி எழில்
கண்டு நானும் ரசிப்பேன் - அவன்
கரமும் கோர்த்து வலமும் வந்தே
நாளும் நானும் களிப்பேன்...

தொடுத்து வைத்த துளசி மாலை
அவன் கழுத்தில் சூட்டி மகிழ்வேன்
கண்ணன் குழலெடுத்து கானம் பாட
அந்த கானத்தில் எனை மறப்பேன்

மா யவன் கமலக் கரம் பற்றி நானும்
தட் டாமாலை சுழல்வேன் - அந்த
கிறுகிறுப்பின் மயக்கத்திலே
இந்த மண்ணுலகம் மறப்பேன்

இன்று பிறந்த நாளாம் - என்
கண்ணன் மண்ணில் உதித்த நாளாம்
நான் வெண்ணை ஊட்டி மகிழ்வேன்
அவன் பாதம் பணிந்து தொழுவேன்

நிதம் கற்பனையில் கனவினிலே
நானும் கண்டு களித்த கண்ணன்
இன்று இல்லம் தேடி வந்துவிட்டான்
என் பாதம் பூமி தொட வில்லை...

இது உள்ளம் துள்ளி மகிழும் நேரம்
என் நெஞ்சம் கொள்ளை போகும்
இனி நேரம் கழியும் கண்ண னிடத்தில்
விடை பெறுகிறேன் யாவரிடத்தில்

எழுதியவர் : சொ. சாந்தி (28-Aug-13, 10:42 am)
பார்வை : 152

மேலே