நடிக்க தெரியாதவள்.

மூட்டை மூட்டையாய்
ஆசை
முட்டித் தள்ளுது
ஏதோஓர் விசை
ஒட்டிய உதடுகள்
உதிர்த்திட துடிக்குது.
வாய்ப்பு வந்ததால்
வார்த்தை மறக்குது.

வறட்டு கெளரவம்
தெரிந்தும் தெரியாத
காதலன்.

சல்லடை மேகங்களுக்கு பின்
அரைகுறையாய் மறையும்
நிலவும்
காதலை மறைக்க
வெக்கத்தை கையில்
எடுக்கும் அவளும்
ஒன்று தான்.

பூட்டிய காதலை
காட்டிக்கொடுக்கும்
வட்ட முகம் மட்டும் - அவள்
கட்டுப்பாட்டில் இல்லை.

-செஞ்சிக்கோட்டை மா.மணி

எழுதியவர் : -செஞ்சிக்கோட்டை மா.மணி (28-Aug-13, 10:54 am)
பார்வை : 101

மேலே