பாகம் 3

சிவா தன் தந்தையின் ஓனர் வீட்டிற்குக்கு ஒரு வித அச்சத்துடனே சென்றான் . தந்தையின் ஓனர் கேரளாவை சேர்ந்தவர் குடும்பம் கேரளாவில் வசிக்கிறது இவரும் இவருடைய சகோதரர்களும் இங்கு வந்து கடை வைத்துள்ளனர் .சிவா தன் தந்தையை காண கடைக்கு செல்லும் போதெல்லாம் ஓனர் இவனை வைத்தகண் வாங்காமல் பார்ப்பார் அந்த பார்வை சிவாவை ஏதோ செய்தது இதனால் தான் சிவா ஓனர் வீட்டிற்கு தனியே செல்ல தயங்கினான். ஓனரின் வீட்டை நெருங்கினான் கதவு மூடியிருந்தது கதவை தட்டினான் கதவு மெல்ல திறந்தது ஓனர் இவனை பார்த்து புன்னகையுடன் வாடா சிவா என்று தோல் மீது கை போட்டு வீட்டினுள் அழைத்து சென்றார் வீட்டில் அவரை தவிர யாரும் இல்லை ஓனர் தோல் மீது கை வைத்தது சிவாவிற்கு என்னவோ செய்தது நாசுக்காக அவர் கையை எடுத்து விட்டான் எதற்காக என்ன வர சொன்னீர்கள் என்று கேட்டான் அதற்கு ஓனர் பழைய பேப்பர் எல்லாம் பரனையில் கிடக்கிறது அதை எடுத்து அடுக்கி கடையில் போட வேண்டும் வா எனக்கு உதவி செய் என்று அவன் சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் வா நான் தூக்கி விடுகிறேன் என்று அவன் இடுப்பில் இரண்டு கையையும் வைத்து தூக்கி விட்டார் சிவாவிற்கு இப்படி அனாவசியமாக தான் மேல் ஓனர் கை வைப்பது பிடிக்கவில்லை இருந்தாலும் தந்தையின் ஓனர் என்பதால் எதுவும் கூற முடியாமல் பொறுத்து கொண்டு பரணை மீது அமர்ந்தான் ஓனரும் பரணை மீது ஏறினார் அவன் எதிரில் உட்கார்ந்து கொண்டார் அவர் அமர்ந்திருந்த விதம் சிவாவை கூச்சம் அடைய செய்தது அவ்வளவு கேவலமாக அமர்ந்திருந்தார் அவர்.
எல்லா பேப்பரையும் அடுக்கி முடித்த பின்னர் எப்படி இறங்குவது என்று யோசித்தான் சிவா இதை கண்ட ஓனர் முதலில் அவர் இறங்கி விட்டு அவனை இறக்கிவிட இரண்டு கையையும் மேலே தூக்கி இறங்கு என்னை பிடித்து கொண்டு என்றார் அவனும் வேறு வழியின்றி அவரின் கரத்தை பிடித்துக்கொண்டு இறங்கிய போது ஓனர் பின் பக்கம் சாய்ந்து விழுந்தார் அவர் மேல் சிவாவும் விழ நேர்ந்தது விழுந்த வேகத்தில் சுதாரித்து கொண்டு வேகமாக எழ முயன்றான் சிவா ஆனால் ஓனரோ அவனை இறுக்கமாக பிடித்திருந்தார் ஒரு வழியாக அவர் கையை உதறி விட்டு எழுந்துவிட்டான் சிவா வேண்டுமென்றே ஓனர் விழுந்தது போன்று இருந்தது அவரின் செய்கைகள் .சிவாவிற்கு ஏதோ விபரீதம் நடக்க போவதாக உள்ளுணர்வு எச்சரிக்கை செய்தது அவன் நினைத்தது போல் ஓனர் மெதுவாக குனிந்து கொண்டே எழுந்து முதுகில் பிடித்துக்கொண்டது சிவா அங்கே தைலம் இருக்கும் எடுத்து வந்து என் முதுகில் தடவிவிடு என்றார் சிவாவிற்கு எரிச்சலாக வந்தது அவரை தொட்டு தைலம் தடவ அவனுக்கு பிடிக்கவில்லை என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்து நின்றான் சிவா.......

மீண்டும் சந்திப்போம்..................

எழுதியவர் : shivanitg (28-Aug-13, 11:28 am)
சேர்த்தது : Shivani Tg
பார்வை : 36

மேலே