எல்லாம் உன்னால் முடியுமென்று......

புரியப்போகும் ஒன்றிற்காக
புரியாத எத்தனையோ தருணங்கள்
அஸ்தமனத்தை அறிந்துகொள்வதற்காக
அதிகாலையில் சூரியோதயம்.
இப்படி ஒவ்வொரு முடிவுக்கும்
ஏதோவொரு தொடக்கமிருக்கிறது.

எல்லாம் உன்னால் முடியுமென்று,
நான் சொல்லவில்லை.
அதைக்கூட
நீ அறிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறாயே என்றுதான் வருந்துகிறேன்.

எழுதியவர் : vendraan (28-Aug-13, 11:29 am)
பார்வை : 72

மேலே