எழுதும் போது
எழுதலாம் என்று நினைக்கும் போது
எழுத நேரமில்லை
எழுத நேரம் இருக்கும் போது
எழுதத் தோன்றவில்லை.
காலமும் எண்ணமும் சேர்ந்து வருகையில்
எழுத முடியவில்லை.
எல்லாவற்றையும் தாண்டி எழுதினால்
பாராட்டு இல்லை
பாராட்டுக்காக எழுத வில்லை
ஒரு மனதிருபதிகாக எழுதும் போது
கல்லெறியும் கேலி பேச்சும்
தரக்குறைவான விமர்சினமும்
காயங்கள் ஏற்படுத்தி எழுதும்
நினைப்பையும் ஆற்றலையும்
வேரோடு பறித்து எழுத்தாளனை
காணாமல் ஆக்கி விடுகின்றன.