நிழல் -நிழலின் நிழல்!

நிழல் -வெளிச்சத்தின் நிழல்!
அம்மா -அன்பின் நிழல்!
அப்பா -பண்பின் நிழல்!
குரு - அறிவின் நிழல்!
பெரியோர் -அனுபவத்தின் நிழல்!
வெற்றி -தோல்வியின் நிழல்!
மகிழ்ச்சி -வெற்றியின் நிழல்!
ஊக்கம் -முயற்சியின் நிழல்!
ஏக்கம் - முயலான்மையின் நிழல்!
வறுமை -சோம்பலின் நிழல்!
உதவி -நண்பனின் நிழல்!
காதல் -உணர்வின் நிழல்!
கவிதை -கருத்தின் நிழல்!
முத்தம் -காதலின் நிழல்!
நிலவு -சூரியனின் நிழல்!
செயற்கை -இயற்கையின் நிழல்!
அகிலமும் -இறைவனின் நிழல்!
கடவுள் -உண்மையின் நிழல்!
நிழல் -நிழலின் நிழல்!

எழுதியவர் : ஔவை (28-Aug-13, 8:55 am)
பார்வை : 122

மேலே