கண்ணா ...! கார்முகில் வண்ணா ..!
கண்ணா கார்முகில் வண்ணா !
மண்ணை உண்ட மன்னவனே !
சின்ன விழி கண்ணனே !
வெண்ணை திருடி உள்ளம் கவர்ந்தவனே !
வாழ்வுக்கு புது அர்த்தம் சொன்னவனே !
மண்ணோர் வாழ வழி காட்டியவனே !
பித்துப் பிடித்தோரின் சித்தம் கலைந்தவனே !
கோபியரின் நித்திரை கலைத்தவனே!
அண்டத்தை மண் பிண்டமாய் தின்றவனே !
அனைத்தும் நான் என்று ஆனந்தமாய் நின்றவனே !
குழல் ஊதி உயிர்களை கொள்ளை கொண்டவனே !
மானே மணிவண்ணா மாசற்ற பொன் வண்ணா !
சின்ன சின்ன பாதம் வைத்து
சிரித்த முத்தால் சிந்தை கவர்ந்து
அடி எடுத்து நடந்து வா ..! ஆனந்த கண்ணா ...!
எமக்கு ஆனந்தத்தை அள்ளித்தா அழகு கண்ணா !