ஹேப்பி பெர்த் டே டு யூ...! கிருஷ்ணா.....!!!
தாயாக வேண்டுமடா கண்ணா உன்னை
தாலாட்டி மகிழ்வதற்கு.....!
கோபியராய் வலம் வரணும்டா உன்னை
கொஞ்சியே நான் மகிழ்வதற்கு..!
குசேலனாய் மாற வேண்டும் நீ என்னை
கொண்டாடி மகிழ்வதற்கு...!
அர்ஜுனனாய் அவதரிக்கணும் நான் உனது
அறநெறியில் நடப்பதற்கு.....!
கம்சனாகவும் பிறக்க வேண்டும் கண்ணா உந்தன்
கருணைத் திருவடி நான் அடைவதற்கு....!
காலிங்கனாகவும் உருப் பெறணும் கண்ணா உன்
கால்கள் என் தலைமேல் அருள்வதற்கு....!
காட்டிலே மூங்கில்லாகனும் கண்ணா உன்
கனி இதழ்கள் முத்துதற்கு......!
காற்றாக நானும் மாறனும் கண்ணா உன்
குழல் ஓசை கலப்பதற்கு.......!
பசுவாக உருவெடுக்கனும் பரந்தாமா உன்
பவழ வாயில் வெண்ணை ருசிப்பதற்கு...!
பாற்கடலாய் நான் மாறவேண்டும் உனக்கு
பாய் போட்டு உறங்க வைப்பதற்கு....!
துளசியாக மாறவேண்டும் நீ எழுந்தருள
தூய அறியனையாய் திகழ்வதற்கு....!
திருமகளாய் தோன்ற வேண்டும் உந்தன்
தித்திக்கும் மார்பில் உறைவதற்கு....!
வேண்டும் வேண்டும் என்று வேண்டுகிறேன்
வேணு கோபாலா - இவ்வேண்டுதல்கள்
வேந்தனே உன் மீது காதல் கொண்டு.....!
வேண்டுகிறேன் வேண்டுகிறேன் இன்னும் ஒரு வரம்......
வேண்டாம் வேண்டாம் மேற்கண்ட எந்த உருவும்..!
இப்போது நான்......
வேண்டுகிறேன் நானே நீயாக வேண்டுமென்று...!
வண்ண நாராயண உருவத்தை
வைகுண்டம் செல்வோர் அனைவரும் பெறுவாராமே.....!
வழங்கி விடு கண்ணா.....! வழங்கி விடு.....!
என் ஆன்மாவில் நீ வந்து கலந்து விடு.......!
என்னைப் போல் நீயும் மாறிவிடு......!
நானும் காத்திருக்கிறேன் உனக்காக....!!!
ஹேப்பி பெர்த் டே டு யூ கிருஷ்ணா
ஹேப்பி பெர்த் டே டு யூ கிருஷ்ணா
ஹேப்பி........
பெர்த்.........
டே..........
டு........
யூ.......கிருஷ்ணா........!
அன்பான ரசிக நெஞ்சங்களுக்கு.......
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.......!