ஒரு சர்வதேச நிகழ்வு..!-பொள்ளாச்சி அபி
தந்தையைக் காணோம்,
தனயனைக் காணோம்.
பிள்ளையைக் காணோம்.,
பெண்ணைக் காணோம்..!
விழுந்த குண்டுளால்
துளைக்கப்பட்ட உடல்
உறுப்புகளைக் காணோம்..,
வீட்டை,நிலத்தைக் காணோம்..,
இன அழிப்புக்காய்
நடந்த போரினால்
குழந்தைகளை,குலக்
கொழுந்துகளை காணோம்..!
உலகத்தை உலுக்கிய
துயரத்தின் குரலுக்கு
உரிய நீதியும்
இதுவரை காணோம்..!
நவநீதம் பிள்ளையெனும்
நம்பிக்கைக் கீற்று
துயர் துடைக்குமா..?
உயிர் திரும்புமா..?
புத்தம் பேசி
நித்தம் கொன்ற
நீசன் மொழிக்கு
பலி ஆகுமா..?