நான்!

சிலர் பேச்சுவாக்கில் நான் யார் தெரியுமா?என்பாரகள்.ஆனால் அவர்கள் யாரென்று அவர்களுக்கே தெரியாது.அந்த" நான்" என்பது யார?அதுதான் ஒ்வொருவருக்குள்ளும் அவகர்களுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும் ஒரு இரகசியம்.அந்த இரகசியத்தை அறிந்துகொள்ளத்தான் நமக்குள் நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதாகிறது.அதற்கு நமது மனதிற்கு பயிற்சியளிக்க வேணடும்.அதை தியானம் அல்லது ஆழ்ந்த ஆன்மீக சிந்தனையென்றும் சொல்லலாம்.ஒரு அமைதியான சூழலில் நமது ஐம்புலன்களுக்கும் .முழுமையான ஓய்வளித்து நமது மனதிற்குமட்டும் பரிபூரணமாக அனுமதியளித்து நமக்குள் அந்த இரகசியத்தைத் தேடவேண்டும்.ஆழ்ந்த சிந்தனைக்குள் நமது மனம் நுழைந்து தேடும் போது எல்லாமே சூன்யமாகத் தோன்றும். .அப்போது இந்த உலகமே தொலைந்துவிட்டது போல் தோன்றும்.நம்மை நாமே இழநுவிட்டது போன்றும் தோன்றும் .காற்றில் மிதக்கும் மிக இலகுவான ஏதோ ஒன்றிற்குள் நாம் இருந்தும் இல்லாத நிலையில் மனதுமட்டும் அந்த இரகசியத்தைக் கண்டறிந்து கேட்கும். நீ என்பது யார்?அப்போது நமக்கு விடை சொல்லத்தெரியாது.ஏனென்றால் நானென்ற ஒன்று அப்போது இல்லை.இதுதான் இரகசியம்.இதுதாதான் உண்மை நான் என்பது ஒரு சூன்யம் அல்லது அகங்காரம்.அக அங்காரம் என்றாலே உள்ளுக்குள் ஒன்றுமே இல்லை என்பதுதான் சரியான பொருள். இந்த நிலை எப்போது ஏற்படுகிறதென்றால் எப்போது ஆழ்ந்த சிந்தனையில நம்மை நாமே தொலைத்துவிடுகிறோமோ அப்போதுதான் நமக்குள் ஏதொ ஒன்று பிரகாசிக்கிறது. அதுதான் தெய்வீக ஞானொளி.அந்த ஞானம்தான் கடவுள்.அனைத்து சுயபோகங்களையும் கடந்து உள்ளிருக்கும் அந்த ஒன்றே ஒன்றுதான் தெய்வீகம்.அதாவது எப்போது நீயே இறைவன் என்ற உண்மையை உணர்கிறாயோ அப்போதே நாம் பெற்றிருக்கும் இந்த உடலானது பொய்யானதுதான் என்பது புரிந்துவிடுகிறது.நமக்குள்ளிருக்கும் தெய்வீகம் எனும் ஆன்மாவிற்கு பெயர் என்பது கிடையாது.உயிரெனும் ஆன்மா நமது உடலில் இருக்கும் வரைதான் நமது உடலுக்குத்தான இந்த உலகம் பெயர் சொல்லி அழைக்கிறது.உயிரெனும் ஆன்மா உடலை விட்டு ஓடி விட்டால் பெயரழிந்து பிணம் என்ற பொதுவான பெயர்தான் குப்பையாகிப்போன உடலுக்கு வழங்கப்படுகிறது..அப்பெயரும் அப்பிணம் எரியூட்டப்படும்வரைதான்.அதற்குபின் அது சாம்பல்தான்.இந்த உண்மை எல்லோருக்கும் தெரியத்தான் செய்கிறது.ஆனாலும் இந்த உலகத்தின் சாபக்கேடு யாரையும் விட்டு வைப்பதில்லையே.பாவம் !உலகின் மாயைநிலையிலிருந்து தப்புவதென்பது கடினமாகிறது.அதற்கான பயிற்சிகளை பெறுவதற்கும் பொறுமை இழந்துவிடுகிறோம் .பசியெனும் கொடுமையும் பகட்டு எனும் ஆசையும் இவ்வுலக மக்களை மெய்மையை உணரவிடாது கட்டிப்போட்டிருக்கிறது. இம்மயக்கத்திலிருந்து இவ்வுலகமக்களைக் காக்கப் பகவானே நீதான் வந்தாக வேண்டும்.ஓம் நமோ நாறாயண பவ.

kppayya.

எழுதியவர் : kppayya (29-Aug-13, 8:11 am)
பார்வை : 221

மேலே