பெயரைத் தவிர
வயதாகி போனால்
என்ன ஆகிறது?
ஒன்றும் பெரிதாக
மாறவில்லை.
என்ன
வெளுத்த முடிக்கு
கருப்பு சாயம்
கண் பார்வைக்கு
கண் கண்ணாடி
பல்லிலாததற்கு
ஒரு பொய் பல் வரிசை.
இருதயம் சரியாக
வேலை செய்வதற்கு
கருவியைப் பொருத்தி
சீராக்குதல்
அல்லது இருதயத்தையே
மாற்றுதல்
மேலும் பலப் பல
வேறுபாடுகள்
மொத்தத்தில்
எதுவும் தன்னோடுதல்ல
பெயரைத் தவிர