கவிக்கரை சிற்பிகள்
கல்லில் செதுக்கினான் சிலைகள்
கலைஞன்
காலத்தை வென்று நிற்கின்றன
கடற்கரை மணலில்
சொல்லில் செதுக்கினான் சிலைகள்
கவிஞன்
காலத்தை வென்று நிற்கின்றன
மனித மனவெளியில்
வள்ளுவன் கம்பன் புகழேந்தி இளங்கோ
பாரதி பாரதி தாசன் கண்ணதாசன் வாலி என
கவிக்கரைச் சிற்பிகள் வரிசை
சொல்லவும் நெடிதே !
ஆயினும் இனிதே !
~~~கல்பனா பாரதி~~~