தீர்வை காணுங்கள் முடிவாய்

மதிப்பிழக்கும் நீயும் மண்ணில்
புதிராக இருப்பதன் மர்மமென்ன !
நாளும் சரிந்திடும் நிலைஉனக்கு
நாட்டில் நிகழும் காரணமென்ன !
​அடையாள குறியீ​ட்டை மாற்றியதே ​
தடையாய் ஆனதோ இந்நிலைக்கு !
நம்பியிருபோர் நாட்டில் நாங்கள்
குழம்பி இருக்கும் நிலையேன் வந்தது !
உலகில் உன்மதிப்பு நாளும் குறைய
உயருகிறது இங்கே நாளும் எல்லாம் !
வல்லுநர் எல்லாம் மௌனம் காப்பதால்
வறியோர் இங்கே வாய் பிளக்கின்றனர் !
வழியும் ஒன்று விரைவில் கண்டால்
வாழ்ந்திடும் நாங்கள் மகிழ்ந்திடுவோம் !
நாளும் உயர்ந்து நீஇமயம் தொட்டால்
வாழும் எங்களின் இதயம் நின்றிடும் !
தீர்வை காணுங்கள் முடிவாய் இதற்கு
சேவை புரியுங்கள் ஆட்சியில் உள்ளோர் !
தேசத்தைக் காத்திட தோள் கொடுப்போம்
தேய்ந்திட்ட ரூபாயின் மதிப்பும் மாறிடவே !
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Aug-13, 8:30 am)
பார்வை : 103

மேலே