என் நிஜ காதலிக்காய்..!

நிலவே உன் எழில் கண்டு
நித்தமும் புகழ்வோர் ஏராளம்
நீ எனக்கு இனி வேண்டாம்
நின்று கேள்.. நிற்காமல் ஓடாதே ..!
நீ இல்லாத நாளே என் திருநாளாம்
அனைவருக்கும் அன்று அமாவாசை
அடியேனுக்கு மட்டும் பௌர்ணமி
அன்று என்னவள் அவள் வருவாள்
அவள் மடியில் தலைவைத்து
ஆகாயத்தில் மிதக்கவைப்பாள்..!
அப்பப்பா..
அண்ணாந்து பார்த்தால்
அசையாத ஆகாயம் இருட்டாய்
அவள் முகம் மட்டும்
அதில் வட்ட நிலவாய்
அப்படியே முகம் பதிப்பேன்..!
நிலவே நீ வராதே.. ஓடிவிடு
நீ எனக்கு வேண்டாம்...
நிற்காமல் ஓடுவாய் உன்
நிழலையும் எடுத்து கொண்டு
நிலவாய் அவள் முகம் இருக்கு
நிச்சயமாய் அது போதுமெனக்கு..!
என் நிஜ காதலிக்காய் ஒரு பதிப்பு..!
நட்புடன்....