எழுத்து இலக்கணம்
இலக்கணம் பற்றிய அடிப்படை விடயங்கள் தொடர்ச்சியாக தொகுத்து தரும் நோக்கத்தில் சிறு சிறு கட்டுரைகளாக அறிந்த தெரிந்த கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். பாடசாலையில் தமிழ் மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியை என்பதால் இதனை செய்ய விரும்புகிறேன்.
எழுத்து இலக்கணம்
தமிழ் எழுத்துகளின் எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு, எனும் பன்னிரு பகுதிகளையும் விளக்கிக் கூறுவது எழுத்து இலக்கணம் ஆகும்.
தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.
முதலெழுத்துகள்
``````````````````````````
**உயிரெழுத்துகள்
**மெய்யெழுத்துகள்
சார்பெழுத்துகள்
```````````````````````
**உயிர்மெய் எழுத்து
**ஆய்த எழுத்து
**உயிரளபெடை
**ஒற்றளபெடை
**குற்றியலுகரம்
**குற்றியலிகரம்
**ஐகாரக் குறுக்கம்
**ஔகாரக் குறுக்கம்
**மகரக்குறுக்கம்
**ஆய்தக்குறுக்கம்
விளக்கங்கள் தொடரும்...