முதலெழுத்துகள்
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
உயிரெழுத்துகள் 12 அவை:
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.
குறில்
குறுகிய ஓசை உடையவை. அவை :
அ,இ,உ,எ,ஒ
நெடில்
நெடிய ஓசை உடையவை. அவை : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ
\\\\\\\\\\\\
மெய்யெழுத்துகள் 18 அவை:
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை:
வல்லினம் : க், ச், ட், த், ப், ற்
மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்
தொடரும்...