வலிக்கு வழி செய்ய....

வலிக்க வழி செய்ய.......

நாள்,

குறித்த நாளில்

சேர்க்க சென்றதும்

நீர் சத்து இல்லை

வலிக்கு நீர் வேண்டும்,

அதுக்கு,

வழி செய்ய வேண்டும்,

வலி பிறந்தால் பிறக்கும்

குழந்தை,

இல்லாவிட்டால்?

பிளக்க வேண்டும்

வயிற்றை,

நரம்புகள் தேடி

பாட்டில் நீரை

சொட்ட சொட்ட

உள்ளே செலுத்த,

உடைந்து வரும்

கண்ணீர் கண்களில்

முட்ட,

தான் வலியோடு

வாயிலில் அலைய

பிறக்கும் வரை

போராட்டம்,

பிறந்தால்

அது குழந்தை

அதற்க்கு முன்னமே

இவள் எப்போதும்

குழந்தை எனக்கு,

எழுதியவர் : (2-Sep-13, 11:47 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 53

மேலே