பிச்சைப் பாத்திரங்கள்

கவிதை
எடுத்த பிச்சை
கவிஞன்...!

காதல்
எடுத்த பிச்சை
காதலர்கள்...!

விழிகள்
எடுத்த பிச்சை
தூக்கம்...!

கனவு
எடுத்த பிச்சை
காட்சி...!

இரு உயிர்கள்
எடுத்த பிச்சை
மழலை...!

இரு வரிகள்
எடுத்த பிச்சை
திருக்குறள்...!

பூமி
எடுத்த பிச்சை
உயிர்கள்...!

பூக்கள்
எடுத்த பிச்சை
வாசனை...!

மழை
எடுத்த பிச்சை
மேகம்...!

மேகம்
எடுத்த பிச்சை
கடல்...

இரவு
எடுத்த பிச்சை
இருள்..!

பகல்
எடுத்த பிச்சை
வெளிச்சம்...!

நிலவு
எடுத்த பிச்சை
அழகு...!

இசை
எடுத்த பிச்சை
செவிகள்...!

மரம்
எடுத்த பிச்சை
விதை...!

வலி
எடுத்த பிச்சை
வெற்றி...!

நான்
எடுத்த பிச்சை
என் தமிழ்...!

சுவாசம்
எடுத்த பிச்சை
காற்று...!

மரணம்
எடுத்த பிச்சை
மனிதன்...!

அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : muhammadghouse (2-Sep-13, 4:48 pm)
பார்வை : 136

மேலே