குறிகள் !

குறிகள் !

அன்பு அதிசய குறி !
அகன்று கொண்டே இருக்கிறது !
காதல் இன்பத்தின் குறி !
இழந்து கொண்டே இருக்கிறோம்!
சாதி சந்தோஷ குறி !
சங்கடப்பட்டு கொண்டே இருக்கிறது !
நீதி நியாயத்தின் குறி !
பாதியாகி மீதியை தேடவேண்டி இருக்கிறது !
போர் அழிவின் குறி !
பார் முழுவதும் தொற்றிக் கொள்கிறது !
கல்வி அறிவின் குறி !
கல்லாமையால் களவாடப் படுகிறது !
கற்பு இருவருக்கும் பொது குறி !
ஒருவர்கென தனிமை படுகிறது!
உறவு பாசத்தின் குறி !
துறவாகிக கொண்டிருக்கிறது !
நாடு நல்ல குறி !
கேட்டின்றி காக்க வேண்டி இருக்கிறது !
நட்பு தோழமையின் குறி !
செப்புதற்கு அரிதாய் சிறக்கிறது !


நட்பில் nashe

எழுதியவர் : nashe (2-Sep-13, 6:39 pm)
பார்வை : 73

மேலே