மாறவேண்டும் இந்நிலை

சிறகடிக்கும் சிந்தையுடன் சிறார்கள்
சிதறிய உள்ளமுடன் உலா இங்கே !

நிச்சயமிலா வாழ்கையில் இங்கே
நியதியற்ற சாதிமத சச்சரவுகள் !

அறிந்திடா எதிர்காலத்திற்கு என்றும்
அளவிலா ஆசையுடன் எண்ணங்கள் !

வழியறியா வருங்காலம் எண்ணி
வாங்கி குவிக்கும் சொத்துக்கள் !

ஏங்கிடும் ஏழைகளோ என்றும்
ஏறுவரிசை எண்ணிக்கை இங்கே !

குற்றம் புரிபவரும் நாளுமிங்கே
குறுநில மன்னராய் மாறுவதிங்கே !

நேர்மையாய் வாழ நினைப்பவரும்
நேர்வழியை தேடுகிறார் இங்கே !

சுயநல நெஞ்சமோ பெருகுகிறது
பொதுநல உயிர்களோ மறையுது !

போராடி பெற்றிட்ட சுதந்திரமோ
பொறுமை இழந்து தவிக்கிறது !

மாறவேண்டும் இந்நிலை இங்கே
காணவேண்டும் நாமும் காலத்தே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (2-Sep-13, 6:17 pm)
பார்வை : 92

மேலே