சாதியத் தீ
சாதிய நிழலில் தலைவன்
மாளிகையில்....
உணர்ச்சிவசப்பட்ட தொண்டன்
சாலையில்....
இந்த சாதியத்தீக்கு இறையாவது
இரண்டு சமூகம் மட்டும்மல்ல...
இரண்டு நூறு வருடமாய்
உயிர்நீத்த தியாகிகளின்.,
தியாகங்கள்....
சாதி உன் சட்டை
உன் உயிர் அல்ல.,
சட்டைகளை விடுத்து
டீசர்ட் அணியும் காலம் இது...:
சாதியை எதிர்க்கிறான் அரசியல்வாதி
தேர்தலுக்கு முன்...
சாதியக்காரனுக்கு இடஒதீக்கீடு
தேர்தலுக்குப் பின்...
அன்று.,
வௌ்ளையனை விரட்ட
வௌ்ளையன் கொடுத்த அடையாளங்களை
தீக்கிரையாக்கினான் "காந்தி "....
சாதியை வரட்ட
சாதிய அடையாளங்களை
தீக்கிரையாக்குவானா "இன்றைய பகுத்தறிவாளன்"....????