காக்கையின் அரிய நற்பண்புகள் ஆறு!
காக்கையின் அரிய நற்பண்புகள் ஆறு!
ஒரு பழம்பாடல் காகங்களிடம் காணப்படும் ஆறு நற்பணபுகளைக் கூறுகிறது. எளிமையான ஒரு வெண்பா வடிவில் அமைந்துள்ள அப்பாடல் இதுதான்:
காலை எழுந்திருத்தல் காணாமலே புணர்தல்
மாலை குளித்து மனைபுகுதல் – சாலவே
உற்றாரோ(டு) உண்ணல் உறவாடல் இவ்ஆறும்
கற்பாயே காக்கைக் குணம்.
உரையே தேவையின்றி எளிதில் புரிகின்ற இப்பாடல் ‘விநோத ரச மஞ்சரி’ என்ற நூலில் காணப்படுகின்றது.