காத்திருப்பு கசக்குமா...??

அழகழகாய் பெண்கள்,
அவர்களை மயக்க வரும் ஆண்கள்,
நகரத்தின் மத்தியில்
பன்னாடை இவன்...

நேரம் போக்க எண்ணியவன்
நேர்த்தியான தேநீர் கடையினுள்
செல்ல,வரவேற்ற பாவை
சற்று ஏளனமாய்த்தான் பார்த்தாள்...

மொட்டைத்தலை,
சவரம் செய்யா முகம்,
ஏதேதோ கற்பனைகளுடன்
தேவதைக்காய் ஒரு காத்திருப்பு

இடம், பொருள் அறிந்தவன்
இயல்பாய் சொல்லிவிட்டான்
ஒரு பனிச்சாற்றின் பெயரை

விலை மாதசம்பளத்தின்
ஒரு நாள் ஊதியம்...

கனமான நிமிடங்கள்
வருடங்களாய் கனக்க
ஊதீத்தீர்த்தான்,
உணர்வுகளை அடக்க....

சினுங்கிய தொலைபேசியில்
கெஞ்சுகிறாள் செல்லமாக
"வந்துவிடுகிறேன்....
காத்திருப்பாயாட....?"

நிட்சயம் காத்திருக்கிறேன்...!!!
மரணம்போல் நீயும்
எனக்காய் வருவது
நிட்சயமாகிப்போனதால்...!!!

உன் முப்பது நிமிட
தரிசனத்துக்காய்,
மூன்றுமணிநேர தவம் செய்யும்
பாக்கியம் பெற்றவன் நான்...!!!

காத்திருப்புக்கள் கசக்குமாடி...??
அதுவும் உன் நினைவுகள்
சுமந்து - உனக்காக காத்திருப்பது
எனக்கு கசக்குமாடி....?!!!

எழுதியவர் : முஸ்தாக் அஹமட் (3-Sep-13, 11:58 am)
பார்வை : 205

சிறந்த கவிதைகள்

மேலே