அறிவுரை - ஆபத்து

வன்மைகொள் பருக்கை கல்லின்
வழியெல்லாம் பள்ளம் மேடு
முன்னதாக இறங்கி முதலைகள்
கிடப்பதைப்போல
சின்னதும் பெரிதுமான வெடிப்பு தாண்டி

அந்த காட்டில்

மழைமுகில் மின்னலுக்கு அஞ்சி
மாங்குயில் பறந்து வந்து
வழங்குக குடிசை என்று
வாய்விட்டு வண்ணம்பாடக்
கொழுன்கிளை தோள் உயர்த்தி
குளிரிலை கை அமர்த்தி
பழந்தந்து களிப்பாக கும்பின்
பசுந்தளிர் வழங்கும்- ( பாவேந்தர் )
அந்த ஆல் மரத்தில்

முதுவேனில் முடியும்
கார் அதுவோ தொடங்கும் நேரம்

பறவைகள் ஒன்றுகூடி
மழைநேர காப்பு கூடொன்று
ஆளொன்றாய் கிளைதோறும்
பின்ணியே கிடக்களாயிற்று
சேமித்த இறைகளோடு
பறஇறகுகளை ஓய்விலிட்டு

ஓ வென்றே முகில் பிளந்து
வள்ளுவரின் குறளாய்
ஒவ்வொரு துளியும்
நிலம் நனைக்க
வெள்ளம்தான் வந்ததங்கே

புரண்டோடும் வெள்ளமத்தில்
மலைப்பாம்பின் நுனிவாயில்
தப்பிய நுணலாய்
முழுதும் நனைந்து கொடுங்குளிரில்
குரங்கொன்று அவ்வழி வந்தது

மழை நில்லாமல்
பெய்திடவே ஆல்
கிளையொன்றில் பாதியாய்
தன்னுடலை
மறைக்கத் தான்
முயன்றது

வானத்து வல்லூறு
கிளைமறைவில்
எலியென்று
குரங்கின் வாலை
கொத்தித்தான் இழுத்தது

நுணலாய் தப்பியே
வழிமாறி வந்தக(டு)ளிப்பில்
வேறிடம் புகல
ஓடவே எண்ணிற்று

சிறகு மறந்த பறவைகள்
நோட்டமிட்ட குரங்கை

உன் வருத்தமதை
யாம் கண்டோம்
மடக்குரங்கே
மறந்தாயா - காலமிது கார்
வருடந்தோறும் வரும்
போகும்

எங்களைபோல் ஓர்
காப்பு கூடொன்று
ஏதுமுண்டா
உனக்கென்று

எங்கள் கூடோ சிறிது
-அத்தோடு நில்லாமல்
பசியோடு நீயிருப்பாய்
அயோ பாவம்
எங்களிடம் இருப்பதுவோ
சில நூறு நெல் மணிகள்
என்றே என்று

உபதேசம் செய்திடவே

மரம் உரசிய காட்டுத்தீயால்
காடெறியும் கண்டதுண்டோ
நீங்களென்று

கூடுகள் ஒவ்வொன்றையும்
நொடிப்பொழுதில்
களைத்திட்டு

கூட்டம் தேடி சென்றது
மடக்குரங்கு.


நீதி : அறிவுரைகள் பல நேரங்களில் பகையாகும். எஞ்சிய சில நேரங்களிலும் கூட.

எழுதியவர் : ANBARASAN (3-Sep-13, 4:02 pm)
பார்வை : 145

மேலே