நன்றி தாயே

பத்து திங்கள் பாரம் சுமந்து
பதமாய் என்னை காத்து வளர்த்து
வலிகள் பொருத்து வயிற்றை கிழித்து
பிறவி கொடுத்தாய் எந்தன் தாயே ...........

ரத்தம் முறித்து பாலாய் கொடுத்து
நித்தம் என்மேல் அக்கறை எடுத்து
முத்தம் கொடுத்து முந்தானை துணியால்
காத்து வளர்த்தாயே கருணை தாயே ..........

ஈ எறும்பு அண்டாமல் என்னை காத்து
எவரின் ஈகையும் ஏற்க விடாமல்
உழைத்து உழைத்து என்னை வளர்த்தாய்
பட்டிணிகிடந்தே பாதி இளைத்தாய் ........

உத்தம வாழ்கையின் அர்த்தம் சொல்லி
உத்தமனாய் வாழ சொன்னவள் நீயே
உழைப்பின் வலிமையை எனக்கு சொல்லி
உயர வைத்தவள் நீயே தாயே ...........

ஒழுக்கம் உயிரென சொல்லி சொல்லி
நல்ல உணர்வுகளை தந்தாய் நீயேதாயே
ஊர் போற்றிடும் மனிதனாய் என்னை
உயரவைத்தவள் நீயே தாயே ..........

மனிதத்தை மறந்த மனித உலகில்
நல்ல மனிதனாய் வளர்த்தாய் நீயேதாயே
மானுடம் காக்கும் கொள்கைகள் தந்து
மனிதாபிமானம் என்னில் வளர்த்தாய் நீயே ........

சோறு அற்று கிடந்தபோதும்
கேடு எண்ணம் வந்தது இல்லை
வீரனாக வளர்த்த போதும்
எவரையும் வீழ்த்திபார்க்க நினைத்தது இல்லை ....

பிள்ளையாய் நீயும் பெற்று என்னை
நல்மனிதனாக என்னை வளர்த்தாய் தாயே
பெருமை கொள்வேன் உன்னை நினைத்து
என்னை மனிதனாக வளர்த்தமைக்கு .........

எழுதியவர் : வினாயகமுருகன் (3-Sep-13, 4:27 pm)
Tanglish : nandri thaayaye
பார்வை : 73

மேலே