பொருளாதாரம்

தக தக என ஒளிர்கிறது
ஊழலில் பணம்
திபு திபு என எரிகிறது
இலஞ்சத்தில் பணம்
மள மள என ஏறுகிறது
விலைவாசியில் பணம்
சர சர என வீழ்கிறது
பொருளாதாரம்
நடு நடு என நடுங்குகிறது
வாழ்வதாரம் .

இம்சைக்குள் அடங்குது
வாழ்க்கை
இதுதானோ – நம்
வாடிக்கை -நாட்டிற்கு
எப்போது வரும் -நல்ல
நாழிகை !

-------------------------------இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (3-Sep-13, 5:01 pm)
பார்வை : 902

மேலே