அந்த நாள் ஞாபகம் [2] !!...

கொஞ்சி பேசிய பேச்சையும்
கெஞ்சி பேசிய வார்த்தையும்
கொஞ்சம் கொஞ்சமாய் மறந்தனே
நான் !...
மழழை என்னும் பருவத்தில்

ஓடி விளையாடும் நண்பர்களையும்
கூடி விளையாடும் தோழிகளையும்
கொஞ்சி பேசும் உறவினர்களையும்
கெஞ்சி பேசும் வயதானவர்களையும்
கொஞ்சம் கொஞ்சமாய் மறந்தனே
நான் !...
குழந்தை என்னும் பருவத்தில்

புதிய இடம் தேடி
பொடிநடையாய் நடந்து
புது புது புத்தி கூறும் கூடம் சேர்ந்து
சேரும் நாங்களெல்லாம் ஒன்றியினைந்து
கூறும் வார்த்தையை கூர்மையாய்
கவனித்தும் கவனிக்காமலும்
பார்த்தும் பார்க்காமலும்
பயங்கரமாக சத்தம் போட்டும்
கேட்ட பாடலையும் கதையையும்
பாதி பாதியாய்
பாடல்கள் பாடி கதைகள் பேசி
பால்வாடியில் பயின்ற பல கலைகளை
கொஞ்சம் கொஞ்சமாய் மறந்தனே
நான் !...
பையன் என்னும் பருவத்தில்

பேசிய பேச்சுகளையும்
கேட்ட வார்த்தைகளையும்
பெருமையாய் நான் பேச
நான்
கல்வி
கலை
அறிவு ஆற்றல் பெற
அன்பு பள்ளி கூடம் சென்று
ஆதவரான நண்பர்கள் பெற்று
அன்பான தோழிகள் பெற்று
கல்வி, கலை, அறிவு ஆற்றல் பெற்று
வார்த்தைகளை வகைவகையாய் பிரித்து
கற்கும் கல்வியை கலையாக கற்று
கலையில் அறிவியலை புகுத்தி
புதிய படைப்புகளை
மனதில் படைத்ததை
கொஞ்சம் கொஞ்சமாய் மறந்தனே
நான் !...
மாணவன் என்னும் பருவத்தில்

மலரும் நினைவில்
அந்த நாள் ஞாபகம் வந்ததே
அன்பு என்னும் தோற்றத்தில்

என்றும் அன்புடன்

எழுதியவர் : எல்விஸ் ராஜு (3-Sep-13, 7:42 pm)
பார்வை : 126

சிறந்த கவிதைகள்

மேலே