அந்த நாள் ஞாபகம் !..

காலை என்னும் வேளையில்
கண் விழித்து
கட கடவென
கண் துடைத்து
படாரென எழுந்து
பக்கவாட்டில் உள்ள
தீ பெட்டியை எடுத்து
அவை ஒன்று சேர உராய்த்து
ஒளிரும் ஒளியை
விளக்குத் திரியில்
ஒன்றாய் சேர்த்து வைக்க

தீண்டும் கருமேகம் கரைகிறதே
ஒளிரும் விளக்கொளியால்

வீழ்கிறதே தீயும் குச்சியும்
ஒளிரும் விளக்கொளியால்

ஒளிரும் விளக்கொளியால்
இருண்ட வீடும் இருள் அகல
இருக்கும் பொருள்க எனக்கு தெரிய
எழுந்து சென்ற நானோ
என் இமைகள் தேடும்
அலமாரி அருகில் நானிருக்க
என் கைகள் பற்றியதோ
நான் படிக்க நினைக்கும் புத்தகத்தை

என் பார்வைகளோ படிக்க வேண்டிய
இடத்தை பார்க்க
படிக்கும் இடத்தை நோக்கி
என் கால்கள் கட கடவென நடக்க
அமர்ந்த இடத்தில்
அமைதியாக புத்தகத்தை
என் கண்கள் பார்க்க
பார்க்க பார்க்க பக்கங்கள்
நகர்ந்த வண்ணம்
அமைதியாய் குடிகொண்டான்
என் நெஞ்சத்தில் அன்று
அந்த நாள் ஞாபகம்
இன்று தோன்றவில்லையே

என்றும் அன்புடன்

எழுதியவர் : எல்விஸ் ராஜு (3-Sep-13, 4:28 pm)
பார்வை : 101

மேலே