உன்னை நான் நினைக்கின்றேன்
உன்னை
கூண்டில் அடைக்கவில்லை
கம்பிகளுக்குள்ளும் திணிக்க வில்லை
அறையில் இட்டு அடைக்க்கவுமில்லை
குளவிபோல் கொத்தி எடுக்கவுமில்லை
என் நா தெறிக்க உன்னை ஏசவும் இல்லை
பிறகு ஏன் என் இதயத்தில் நீ ஒளிந்து கொண்டாய்?
உன்னை நான் நினைக்கின்றேனோ...!

