கேள்விக் குறி ?????
எனது வாழ்க்கை ஒரு
கேள்விக் குறி???;
எப்போதோ செத்த என்னை
மீண்டும் மீண்டும்
சாகடிப்பதில் இவனுக்கு
அப்படி என்ன இன்பம் ;
நான் ஒவ்வொரு நாளும்
இவனுக்காகவே இறக்கிறேன் ;
அவன் தன் மனதில் உள்ளதை
பகிர்ந்து கொள்ளும் போது
நான் மட்டும் தனிமையில்
ஊமையாய் கண்ணீர் விட்டு
கதறுவது ஏன் அவனுக்கு
மட்டும் புரியவில்லை ?
இனி எனது வாழ்க்கை ஒரு
கேள்விக் குறி ????
என்னை இந்த நரகத்திலிருந்து
மீட்பது யார் ?????
தேடுகிறேன் மனிதர்களை .....
தேற்றுவார் யாருமில்லை !!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
