என்னை சுற்றி தவிக்கும் நினைவுகள்

என் காகிதங்கள் கதறுகின்றன
எழுதுகோலே உன் வருகையை
தர மறுக்கிறேன் என்று!!!!

என் கண்ணீரும் சிதறுகின்றன புன்னகையே
உன்னை தர மறுக்கிறேன் என்று !!!!!

என் இரவுகளும் பரிதவிகின்றன
நிம்மதியான உறக்கத்தை
தர மறுக்கிறேன் என்று!!!

என் வீடு விளக்குகளும் பயபடுகின்றன
அணைந்து எறியும் நிலையை தந்து
அதன் ஆயுளை குறைக்கிறேன் என்று!!!!

என் தோட்ட மலர்களும் வாடுகின்றன
அதன் வளர்ச்சிகான நீரை
நான் தூற்றவில்லை என்று !!!!

என் கை கடிகாரமும் சுற்றி முடித்து
ஓய்ந்து விட்டது !!!!!

நானும் இன்னும் கண்ணீர்
துளிகளுடன் !!!!!!

இன்று விழிகளில் நீர் துடைத்து
என்னுள் விழித்துக்கொண்டேன்
நான் வாழ இந்த உலகில் உள்ளது காற்று!!!!

மற்றவர் வாழ
என் சோகம் கலைத்து வெளிபடுத்துவேன் என் வெற்றியின் ஊற்று !!!!!


என்றும் உங்கள்
உமா நிலா

எழுதியவர் : உமா நிலா (4-Sep-13, 7:14 pm)
பார்வை : 96

மேலே