எல்லையற்ற கடவுள் (ஆசிரியர் தின கவிதை)

கரும்பலகையில் வெள்ளை
சுண்ணாம்புகட்டியில் எழுதிய காலம் முதல்
இன்று வெள்ளை பலகையில் விதவிதமான
வண்ண எழுத்துகளால் எழுதுகின்ற காலத்திலும்

மறைந்து வரும் பாரம்பரியமும்
வளர்ந்து வரும் விஞ்ஞானமும்
எத்தனையோ மாற்றங்களை கண்டாலும்
என்றும் மாறாமலும்,மறையாமலும்,
மட்காமலும்,மடியாமலும்
வரந்துவரும் கல்வியை
எல்லோரின் தேவைக்காகவும்
மக்களின் நல்வாழ்விற்காகவும்
ஆசிரியர்கள் செய்யும் சேவைக்காகவும்
நான் தலைவணங்குகிறேன்
அதனாலயே அப்பனிக்கான
கல்வியைபெறவே நான் விரும்புகிறேன்

கற்பதும்,கற்றுத்தருவதும் கடவுள் தந்த வரம் அதை பெற்றுகொள்வதில் நான் அடைகிறேன் பெருமிதம்

முதல் வகுப்பில் முயல்-ஆமை கதை கூறி
இளமை பருவத்தில் எங்களின் முயலாமைதான்
வெற்றிக்கு தடையாக இருக்கிறது என்று எங்களின்அறியாமையினை நீக்கி
எப்போதும் எங்களுக்கு எல்லை இல்லாத
கடவுளாய் இருப்பதுஎங்களின் ஆசிர்யர்களே

எழுதியவர் : அரவிந்த் (4-Sep-13, 7:31 pm)
சேர்த்தது : Mani aravind alr
பார்வை : 130

மேலே